அரசியல்வாதியோடு விவாதிக்கலாம் அரசியல் வியாபாரியோடு விவாதிக்க தயாராக இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை சிறு வயது குழந்தையாக சவலை குழந்தையாக பார்க்கிறோம் என விமர்சித்தார்.
மத நல்லிணக்கத்தோடு வாழும் சூழ்நிலை
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலாதா ஒரு இந்துத்துவாவாதி எனவும், இந்து மத தீவிர பற்றாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் ஆளுநரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அண்ணாமலையின் கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும் ஒரு மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா.
பாஜகவில் தலைவர்கள் இல்லையா,?
பாஜக மாநிலதலைவரான அண்ணாமலை எதற்கும் லாயக்கில்லாதவர் மெச்சூரிட்டி இல்லாதவர் இம் மெச்சூரிட்டி நபர். பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலை தான்.பாஜகவில் தலைவர்கள் இல்லையா பாஜகவை வளர்க்க கஷ்டப்பட்டவர் அத்வானி, வாஜ்பாய் அவர்களை பற்றி ஏன் பேச மறுக்கிறார் அண்ணாமலை. திமுகவின் பி டீமாக செயல்படுகிறார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது சட்டம் ஒழுங்கை பற்றி அண்ணாமலை வாய் திறக்கிறாரா நதிநீர் பிரச்சனை பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கி கொடுத்தும் அதை செயல்படுத்த வக்கில்லாமல் திமுக உள்ளது. அதை கண்டிக்க அண்ணாமலைக்கு திராணி இல்லை. அம்மாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் ஒரு இழிவான செயலை செய்து வருகின்றனர். அண்ணாமலை அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாதி அல்லது அரசியல் வியாபாரி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
முகம் சுளிக்க வைக்கிறது
பாஜக மாநிலதலைவரான அண்ணாமலை எதற்கும் லாயக்கில்லாதவர் மெச்சூரிட்டி இல்லாதவர் இம் மெச்சூரிட்டி நபர். பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலை தான். தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆளுநராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? கரை சேவைக்கு ஆட்களை அனுப்பினார் என்று கூறுகிறார். அதிமுக தலைவர்களே அதை பேசினார்கள் என்று கூறுவது பொறுப்பெற்ற முறையில் பேசுவது முகம் சுளிக்க வகையில் இருக்கிறது. எடுத்துக்காட்டுங்கள் கரை சேவைக்கு ஆள் அனுப்ப அம்மா சொன்னார்கள் என்றால் தான் அரசியல் விட்டு நான் விலக தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். ராமர் கோவில் கட்ட வேண்டும் மசூதியும் இருக்க வேண்டும் அதுதான் அம்மா விரும்பினார்கள்.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
அண்ணாமலை அரசியல் வியாபாரி
தெய்வ பற்று இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா என கேள்வி எழுப்பியவர், தெய்வ பத்தி அம்மாவுக்கு இருந்தது. ஆனால் மத பிரிவினை கிடையாது. இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாத ஒரு அரை வேக்காடு தான் அண்ணாமலை. அண்ணாமலை எந்த காரிலில் வந்தார். இன்று என்ற காரில் போகிறார். உழைத்த சம்பாதித்தாத அனைத்தும் ஊழலிலும் உருவமாக உள்ளது. பிஜேபி மக்களை ஏமாற்றியுள்ளது. ஒரு அரசியல் வியாபாரி அறவேக்காடு இவர்களோடு நாங்கள் சென்று விவாதம் செய்ய வேண்டுமா அரசியல்வாதியோடு விவாதிக்கலாம் அரசியல் வியாபாரி விவாதிக்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை சிறு வயது குழந்தையாக சவலை குழந்தையாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.
அடையாளத்திற்காகவும், முகவரிக்காகவும் அண்ணாமலை ஜெயலலிதாவை பற்றி பேசுகிறார் - உதயகுமார் சாடல்