காக்கியை தாக்கும் போதை ஆசாமிகள்! காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்யப்போகிறார்? இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published May 29, 2024, 6:44 AM IST

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது. 


திருச்செங்கோடு அருகே கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கவில்லையா? எப்போது கிடைக்கும்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது. 

கையாலகாத விடியா திமுக ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது. இத்தகையவர்களால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் பயமும் அச்சமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  ஆளுங்கட்சி தான் இப்படி இருக்குதுன்னா! எதிர்க்கட்சி அதுக்கு மேல! அரசியல் செய்யத்தெரியாத இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

click me!