கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

By Velmurugan s  |  First Published May 28, 2024, 11:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் மணிமண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 7வது கட்டமாக வருகின்ற ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழவதும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வருகின்ற 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் மேற்கொள்ள உள்ளார். மே 30 முதல் ஜூன் 1ம் தேதி வரை தொடர்ச்சியா 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

கோவையில் பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட நபர் அடித்து கொலை

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி, பிரசாரம் ஓய்ந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் தான் உள்ளன. நரேந்திர மோடி வாக்குப்பதிவுக்கு முன்னதாக தியான நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மே 30 முதல் ஜூன் 1 வரை திரு.நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. 

அண்ணன், அண்ணனின் நண்பன், டெய்லர்; சென்னையில் சிறுமியை குறிவைத்து வேட்டையாடிய கொடூரம்

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில்  இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!