தென்சென்னையில் 11 வயது சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த 2 சிறுவர்கள் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்சென்னை பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 11 வயதான முதல் மகள் அப்பகுதியில் உள்ள பகுதியில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல்கிறார். இந்நிலையில் சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு வயிறு வலிப்பதாக தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை அவர் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது சித்தியிடம் தனது உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளார். கூடவே தனக்கு நடந்த அநீதியையும் தெரிவித்துள்ளார். அப்போது தனது பெரிப்பா மகனான அண்ணன் ஒருவர் தனக்கு திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, தனது தாயாரிடம் தெரிவித்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தி உள்ளார்.
undefined
அதன் அடிப்படையில் சிறுமியை அவரது பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் நிலையை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது அவர் பல அதிர்ச்சி சம்பவங்களை தெரிவித்துள்ளார். அதன்படி தனது அண்ணன் உறவுமுறையில் உள்ள 16 வயது சிறுவனுடன் நான் நட்பாக பேசி பழகி வந்தேன். ஆனால் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எனது வீட்டிற்கு வந்த அண்ணன் என்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மேலும் இதனை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டினார். அதனால் நான் யாரிடமும் சொல்லவில்லை.
மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு; அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி
இதே போன்று அந்த சிறுமியை சிறுவன் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுவனின் நண்பனுக்கு தெரியவரவே அச்சிறுவனும் சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள டெய்லர் ஒருவருக்கு தெரியவரவே அவரும் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.