காதலியையும், காதலனையும் வெட்டிவிட்டு.. தில்லாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

By vinoth kumar  |  First Published May 28, 2024, 12:09 PM IST

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்(20). பரங்கிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். 


சென்னையில் காதலியையும், காதலனையும் இருவரையும் வீடு புகுந்து வெட்டி விட்டு அந்த காட்சிகளை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்(20). பரங்கிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரவேல் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் பெரியமேடு கஜபதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடியான அப்பாஸ் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இஸ்ரவேல் மற்றும் அப்பாஸ் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! மகள் மூலம் வலை விரிப்பு! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? பகீர்!

இதனையடுத்து  நேற்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரவேல் மற்றும் அவரது காதலியை அப்பாஸ் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் டி.பி. சத்திரம்  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:  காசுக்காக இப்படிலாமா செய்வாங்க! தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த காரியம்! முக்கிய கட்சி பிரமுகர் கைது!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இருவரையும் வீடு புகுந்து வெட்டிய கும்பல் அந்த காட்சிகளை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாகவும் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பாஸ், ஜன்னத், சதீஷ்குமார் மற்றும் வசந்த் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

click me!