முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக ஜவாஹிருல்லா புகார் கூறியுள்ளார்.
கொளுத்தும் வெயிலில் சிறப்பு வகுப்புகள்
தமிழகத்தில் வெயிலின் தாக்கல் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இந்தநிலையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவது மாணவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி கடுமையிலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகவும்,கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறைஅளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக 105 க்கும் மேல் வெப்பநிலை இருந்துவருகிறது. முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு
இத்தகையசூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் இருக்கிறார்கள். இதுமாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மன அழுத்தத்தை உருவாக்கும்.
கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காகக் குறுக்கு வழியில் தனியார்ப் பள்ளிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது.எனவே பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இது விடயத்தில் தலையிட்டுச் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்