வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தான் திருந்தி வாழ்வதாகவும், அவதூறு பரப்புவதாகவும் செல்வம் கூறுகிறார்.
வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க உத்தரவு
மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோவையில் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்காக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்குமாறு போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருந்தி வாழ்ந்து வருகிறேன்
இந்நிலையில், கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வரிச்சியூர் செல்வம்: கோயம்புத்தூர் சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி வெளியாகி எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக என் மீது எந்த வழக்குகளும் இல்லை என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: யார் இந்த ஜான் ஜெபராஜ்? கோவையில் அவர் செய்த குற்றத்தின் பின்னணி என்ன?
அவதூறு பரப்புகிறார்கள்
தற்போது நான் திருந்தி ஏராளமான திருமணங்களை நடத்தி வைக்கும் அளவிற்கு மாறியுள்ளேன். ஆனால் ஏன் என் மீது இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை. தற்போது உள்ள ரவுடிகள் மனிதர்களாக இல்லை மிருகங்கள் போல இருப்பதனால் தான் காவல்துறையினர் அவர்களை என்கவுண்டர் செய்கிறார்கள்/ கால் கையை உடைக்கிறார்கள் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இன்ஸ்டாகிராமிற்காக கையில் அரிவாள் வைத்து சுத்துவது வாளால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போலீசுக்கு தெரிந்தால் கைகால்கள் உடைக்கப்படும். என் குடும்பம் பேரன் பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது.
இதையும் படிங்க: அதிகாலையில் அதிர்ச்சி! திருவண்ணாமலை அருகே கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்! 4 பேர் பலி!
நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை
தற்போது திருமண நிகழ்வுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். தன்னை என்கவுண்டர் செய்ய உள்ளதாக வந்த செய்தியால் எனது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமண நிகழ்வுகளில் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என் மீது பழைய வழக்குகள் மட்டுமே உள்ளது. நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. தற்போது இளைஞர்கள் மத்தியில் கஞ்சா போதை பவுடர் பழக்கம. அதிகரித்துள்ளது என வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.