அமைச்சர் சேகர்பாபுவை தொலைபேசியில் மிரட்டிய கொளத்தூர் தனராஜ் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அணி நிர்வாகி பதவி பறிக்கப்பட்டதால் மகேஷ் தரப்பினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளது.
Minister Sekarbabu Threatening Audio : வட சென்னையில் முக்கிய நிர்வாகியாகவும், தமிழக அமைச்சர்களில் முக்கிய இடத்தில் உள்ளவர் சேகர்பாபு, முதலமைச்சர் ஸ்டாலினின் வலது கரமாக உள்ளார். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபுவை தொலைபேசியில் ஒருவர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தனராஜ் என்பவர் முன்னாள் திமுக இளைஞர் அணி செயலாளர் மகேஷ் என்பவரின் ஆதரவாளர் ஆவார். கொளத்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்வது வாங்குவது போன்ற தொழில் செய்து வருகிறார்.
மேலும் பலரையும் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொளத்தூர் தனராஜ், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.அந்த ஆடியோவில், கொளத்தூர் தனராஜ், அமைச்சர் சேகர்பாபுவை தொடர்பு கொண்டு உங்களிடம் பேச வேண்டும் என கூறுகிறார்.
அமைச்சர் சேகர்பாபுவிற்கு மிரட்டல்
அதற்கு அமைச்சர் சேகர்பாபு நேரில் வா என தெரிவிக்கிறார். ஏன் தொலைபேசியில் பேச மாட்டீர்களா என கேள்வி எழுப்புகிறார் தனராஜ், தொடர்ந்து மரியாதை குறைவாகவும், மிரட்டும் வகையிலும் தன்ராஜ் பேசுகிறார். இதற்கு அமைச்சர் காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என கூறுகிறார். இதனையடுத்து தனராஜ், சவுக்கு ஷங்கர் உடைய விவகாரத்தை ஊடகத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். இதற்கு அமைச்சர் சொல்லு என கூறுகிறார்.
மரியாதையாக போனை வை என அமைச்சர் தெரிவிக்கிறார். இதற்கு பதிலுக்கு பதில் பேசும் தன்ராஜ் மிரட்டும் தோணியில் பேசுகிறார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் புகாரின் பேரில் தனராஜ் போலீசார் சுற்றி வளைத்த பிடித்ததாகவும் அவரிடம் இருந்து தொலைபேசியை பறித்ததாகவும் கூறப்படுகிறது.