யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்! ராமதாஸ் உத்தரவு! தைலாபுரத்தில் என்ன நடக்கிறது?

Published : Apr 12, 2025, 03:52 PM IST
யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்! ராமதாஸ் உத்தரவு! தைலாபுரத்தில் என்ன நடக்கிறது?

சுருக்கம்

யாரும் என்னை பார்க்க வரக்கூடாது என்று பாமக நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் பாமகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 

Ramadoss  vs Anbumani Ramadoss Clash: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மறுபுறம் தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, தானே தலைவராகப் பொறுப்பேற்பதாக பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

பாமகவில் பெரும் மோதல் 

அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பாமக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது. ராமதாஸின் ஆலோசனை இல்லாமல் அன்புமணி கட்சிக்குள் தன்னிச்சையாக முடிவெடுத்து வந்ததால் ராமதாஸ் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. கடும் மோதலில் ஈடுபட்ட தந்தையையும், மகனையும் சமாதானப்படுத்த பாமக நிர்வாகிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் மோதல் 

இதற்கிடையே நேற்று திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள வீட்டில் ராமதாசை ஜி.கே. மணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிநது வெளியே வந்த ஜி.கே.மணி, ''ராமதாசும், அன்புமணி ராமதாசும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும். ராமதாசுடன் பேசிய விஷயங்களை வெளியே சொல்ல முடியாது'' என்றார். இதனைத் தொடர்ந்து பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ராமதாசை சந்திக்க முயன்று வருகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி! தமிழக மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக! திமுக கடும் விமர்சனம்!

ராமதாஸ் போட்ட உத்தரவு 

இந்நிலையில், 'பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணி மீது ராமதாஸ் கடும் அப்செட்டில் உள்ளதாகவும், இதனால் அவருக்கு ஆதரவாக பேச வரும் கட்சி நிர்வாகிகள் யாரையும் ராமதாஸ் சந்திக்க தயாராக இல்லை எனவும் பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. 

அன்புமணி ராமதாஸ் நிலை என்ன?

ராமதாஸின் உத்தரவை அடுத்து தைலாபுரம் தோட்டத்துக்கு இன்று காலை முதல் முக்கிய நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. மறுபக்கம் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, திலகபாமா உள்ளிட்ட பாமகவின் முக்கிய நிர்வாகிகள் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசி இருப்பதாகவும், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பாமக நிர்வாகிகளின் விருப்பம் என்றும் அவரிடம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனதில் என்ன உள்ளது?

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மனதில் என்ன உள்ளது? என்பது தெரியாமல் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தந்தையும், மகனும் மீண்டும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே பாமக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tvk vijay: சென்னை புறப்பட்டார் விஜய்.! மீண்டும் 19ல் ஆஜர்..?
காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?