முதன் முறையாக புதிய முயற்சி! QRcodeஐ ஸ்கேன் செய்தால் முதல்வர் ஸ்டாலினே அரசின் திட்டங்களை விடியோவாக விவரிப்பார்

By Ajmal Khan  |  First Published Feb 1, 2024, 11:03 AM IST

திமுக அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரத்தை  QRcodeஐ ஸ்கேன் செய்தால் முதல்வரே திட்டங்களை விடியோவாக விவரிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


திமுக அரசின் திட்டங்கள் என்ன.?

திமுக அரசு பதவியேற்று 3 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Latest Videos

குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும் பங்கு வகிக்கிறது, மேலும் மக்களுக்கான சுகாதார திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்கிறது. இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன் பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

ஆளுநர் ரவியின் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்.? தமிழக பட்ஜெட் எப்போது.? வெளியான தகவல்

வீடியோவாக விவிரிக்கும் ஸ்டாலின்

இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும்  QR CODE ஐ, அலைபேசி கொண்டு ஸ்கேன் செய்து, அரசின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். ஆகுமென்டட் ரியாலிட்டி( Augmented reality) தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் வீடியோவை காணலாம். நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

இதையும் படியுங்கள்

மீண்டும் சி.ஏ.ஏ கொக்கரிப்பா... பாஜகவின் கொட்டத்தை வீழ்த்தி முடிப்போம் !- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

click me!