
திண்டுக்கலைச் சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் தான் எங்கள் கடவுள் என்று கருதி, விரதம் இருந்து மாலை போட்டு விஜயகாந்த் நினைவிடத்திற்கு யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர். எரியோடு தே.மு.தி.க பேரூர் கழக செயலாளர் சங்கர் குரு சாமியாக முன்னின்று தொண்டர்களுக்கு மாலை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் விரதம் இருந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பூ கலசங்களுடன் சென்னை கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு யாத்திரை சென்று, வழிபாடு நடத்த உள்ளனர்.
யார் இந்த சம்பாய் சோரன்? புதிய ஜார்க்கண்ட் முதல்வராகும் பழங்குடியினத் தலைவர் அரசியல் பயணம்
இது குறித்து தொண்டர்கள் கூறிய போது, மறைந்த கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து அவருக்காக மாலை அணிந்து 5 நாட்கள் விரதம் இருக்க உள்ளோம். கேப்டனை வழிபாடு செய்ய "தர்ம தேவனே போற்றி! போற்றி!" என்ற தாரக மந்திரத்தை உருவாக்கியுள்ளோம்.
மேலும் 10 பேர் மாலை அணிய உள்ளனர். அதன் பின்னர் வருகின்ற சனிக்கிழமையன்று பூ கலசங்களுடன் அனைவரும் சென்னைக்கு யாத்திரை சென்று, ஞாயிற்றுக்கிழமை அன்று கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளோம். மேலும் வருகின்ற காலங்களில் ஆண்டுதோறும் இதே போன்று மாலை அணிந்து விரதம் இருந்து நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதில் தேமுதிக எரியோடு பேரூர் தே.மு.தி.க துணை செயலாளர் ராசு, நாகையகோட்டை ஊராட்சி செயலாளர் சவட முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே முதல் முறையாக அரசியல்வாதி ஒருவருக்கு கொண்டர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, பூ கலசம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி Paytm யூஸ் பண்ண முடியாதா? வங்கி சேவையை நிறுத்த ஆர்பிஐ போட்ட அதிரடி உத்தரவு!