திருப்பத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்ட கொடி கம்பம் திடீரென சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பாஜக சார்பில் அவரை வரவேற்க திருப்பத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை பாஜக சார்பில் கொடி கம்பங்கள் மற்றும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதியம் திருப்பத்தூர் பகுதிக்கு வந்த அண்ணாமலை, திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச்சாலையில் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொள்ள வந்த போது அவரை காண ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை; காங். மட்டும் தான் பேசியுள்ளது - துரைமுருகன்
அப்பொழுது திடீரென 50 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் கீழே விழுந்ததில் அங்கிருந்த டீக்கடை அருகில் நின்றிருந்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் கனி மகன் கலீல் (வயது 54) என்பவருக்கு மண்டை உடைந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவரே ஆட்டோவில் ஏறி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவர் அடிப்பட்டு கிடப்பதை கண்டு கொள்ளாமல் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.