கோபாலபுரத்தில் ஆரம்பிக்கும் குடும்ப ஆட்சி தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது - அண்ணாமலை விமர்சனம்

By Velmurugan s  |  First Published Jan 31, 2024, 8:14 PM IST

கோபாலபுரத்தில் தொடங்கும் குடும்ப ஆட்சி தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பரிவியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் என் மண் என் மக்கள் பயணமானது பாஜக சார்பில் இன்று நடைப்பெற்றது. அதன்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுப்பேட்டை சாலையில் இருந்து அவரது பாதயாத்திரையை தொடங்கி மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், சீதை ஆகிய வேடங்களையும் அணிந்து தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் வந்தடைந்தனர்.

அண்ணாமலைக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடி கம்பம் சரிந்து விபத்து; வேடிக்கை பார்த்த நபர் படுகாயம்

Tap to resize

Latest Videos

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், காங்கிரஸ் 10 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட போது 12 லட்சம் கோடி நிலக்கரியில் இருந்து அனைத்திலும் ஊழல் செய்தனர். 10 கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கு கொள்கைகள் இல்லை. இவர்கள் கூட்டணி வைத்த ஒவ்வொரு கட்சியும் இந்தியாவை கூறு போட்டு ஒவ்வொரு இலாக்காவாக பிரித்து ஆட்சியை நடத்தினார்கள். 

மன்மோகன் சிங் ஒரு பொம்மை பிரதமராக மட்டுமே அமர்ந்திருந்தார். அவர் நல்ல மனிதர். காங்கிரசுக்கு தனி பெரும்பான்மை இல்லை. இதனால் கூட்டணியில் உள்ள அனைவரும் ஊழல் செய்தனர். யாரும் பார்க்காத ஊழல் ஆட்சியை காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் செய்தது. முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாடு முடிந்த பின்னர் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? இந்த பொய்யை யாராவது நம்புவோமா? ஜப்பான், சிங்கப்பூர் செல்லும் போது முதல்வர் முதலீட்டை கொண்டு வருவதாக கூறினார். 

திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை; காங். மட்டும் தான் பேசியுள்ளது - துரைமுருகன்

இம்மாவட்டத்தில் பல ஆறுகள் ஓடுகிறது. ஆனால் இந்த பகுதி வளர்ச்சியடையவில்லை. திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சி குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. ஒரு தற்குறி கூட்டம் நம்மை அரசாள்வதை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கோபாலபுரத்தில் ஆரம்பிக்கும் குடும்ப ஆட்சி பட்டிதொட்டி எங்கும் நடக்கிறது. தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அவர் சகோதரர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ஆர்காடு வீராசாமியின் மகன். 

கள்ளக்குறிச்சி எம்பி பொன்முடி மகன் கௌதம சிகாமணி இவர்களுக்கு எல்லாம் ஆள தகுதி இருக்கிறது. ஆனால் நம் குழந்தைகள் நன்றாக படித்தாலும், டி.என்.பி.எஸ்சில் வேலை கிடைக்கவில்லை. ஆனால் இவர்கள் எந்த தகுதியுமின்றி ஆளுகின்றனர். குடும்ப அரசியலை செய்கின்றனர் என பேசினார்.

click me!