அதிகாலையில் சாலையில் பிரசவம் பார்த்த பெண் இன்ஸ்பெக்டர் ! ரோந்து சென்ற போது பிறந்த ஆண் குழந்தை !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2019, 11:32 PM IST
Highlights

சென்னையில் இன்று அதிகாலையில் ரோந்து சென்றபோது சாலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா  மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்து உதவியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 

சென்னை, சூளைமேடு, சௌராஸ்த்ரா நகர் , 8வது தெருவை சேர்ந்தவர் பானுமதி. இவரது கணவர் ஜெயராஜ் தனியார் நிறுவனம் ஒன்றில்  பணியாற்றி வருகிறார்.   நிறைமாத கர்ப்பிணியான சித்ரா விட்டில் இருந்துள்ளார்.

இன்று அதிகாலை இவர் வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு  பானுமதிக்கு திடீரென  பிரசவ வலி ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வராத நிலையில்  பிரசவ வலி தாங்க முடியாமல் தானே நடந்து ஆட்டோ பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார்.  


 
தொடர்ந்து நடக்க முடியாக பானுமதி சாலை ஓரம் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.    அந்த நேரத்தில்  இரவு ரோந்து பணியில் இருந்த சூளைமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா அவர்கள்  கர்பினி பெண்ணிற்கு அங்கு அருகில் இருந்த குப்பை சேகரிக்கும் பெண்ணின் உதவியுடன்  பிரசவம் பார்த்துள்ளார்.  

அப்போது பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.  அதன் பிறகு அங்கு வந்த 108அவசர ஊர்தி மருத்துவ உதவியாளரிடம் தாயையும் சேயையும் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.     ஆய்வாளரின் இத்துரிதமான சேவையை அப்பகுதி  பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

click me!