வேலூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த கைக்குழந்தை பரிதாப பலி

Published : May 27, 2023, 09:45 PM ISTUpdated : May 27, 2023, 09:56 PM IST
வேலூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த கைக்குழந்தை பரிதாப பலி

சுருக்கம்

10 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி இல்லாததால், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தாமதமாகி, குழந்தை இறந்துபோய்விட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே இருக்கும் அல்லேரி அத்திமரத்து கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியான இவரது மனைவி பிரியா. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா. குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடிகொண்டிருந்தது.

அப்போது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஒரு பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் வந்திருக்கிறது. பாம்பை கவனிக்காமல் அதன் அருகே போன அப்பாவிக் குழந்தையை பாம்பு கடித்துவிட்டது. பாம்புக்கடி பட்டதும் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்த பெற்றோர் ஓடி வந்தனர்.

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்.

குழந்தையை பாம்பு கடித்திருப்பதை அறிந்ததும் உடனே அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். வழியில் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி இல்லாததால், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தாமதம் ஆகிவிட்டது. இதனால் பாம்பின் நஞ்சு குழந்தையின் உடல் முழுவதும் பரவி, மருத்துவமனை சென்றையடையும் முன்பே குழந்தை இறந்துபோய்விட்டது.

சாலை வசதி இல்லாததால்தான் தங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று பெற்றோர் கூறுகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த அணைக்கட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்களுக்கு விரைந்து சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!