
கல்லல் குழுமம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த லைகா குழுமம் மற்றும் அதன் இந்திய நிறுவனங்களான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா ஹோட்டல்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ரூ.36 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அசையா சொத்துகளையும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.34.7 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் இன்று தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த விசாரணை, கல்லல் குழுமம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த லைகா குழுமம் மற்றும் அதன் இந்திய நிறுவனங்களான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா ஹோட்டல்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது.
பெட்டிகோ கமர்சியோ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கவுரவ் சாச்ரா, கல்லல் குழுமம் மற்றும் அதன் இயக்குநர்கள்மீது புகார் அளித்திருந்தார். அவரின் புகாரில் அந்நிறுவனம் ரூ.114.37 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர் தொடர்பான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது, டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக கடந்த மே 25ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36.3 கோடியே 34.7 லட்சம் மதிப்பிலான பல்வேறு அசையாச் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. மேலும் விசாரணையில், இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பணம் பெற்ற காரணத்தை விளக்கத் தவறிவிட்டனர் என்பதால் அறக்கட்டளையின் அசையா சொத்து மற்றும் பணம் முடக்கப்பட்டது.
பெட்டிகோ என்பது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட லைகா குழுமத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் லைகா புரொடக்ஷன்ஸ், லைகா ஹோட்டல்கள் போன்ற பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண்.. சாதனை பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்..!!