விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கியதற்கு காரணம் இதுதான்... உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த வருமானவரித்துறை!!

By Narendran SFirst Published Dec 1, 2022, 11:54 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கியதற்கான காரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கியதற்கான காரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ஆம் ஆண்டு முதல் 2018-19 ஆம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களையும் நான்கு வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது.

இதையும் படிங்க: இருதர்ப்பினரை இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் தான் எம்எல்ஏவுக்கான சம்பளமும், அரசு நிதிகளை பெறுகிறேன். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், என்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கியது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இதையும் படிங்க: வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும்… மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த முதன்மை கல்வி அலுவலர்!!

அந்த விளக்கத்தில், சொத்துக்களை விற்காமல் இருக்கவே முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரி பாக்கியில் 20 சதவீதம் மட்டும் செலுத்துமாறு கடிதம் அனுப்பியும் கட்டாததால் தான் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவதை தாமதப்படுத்தவே விஜயபாஸ்கர் பல்வேறு அமைப்புகளில் வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கிறார். எனவே அவரது கோரிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

click me!