EVM : ஊட்டியை தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திர அறை சிசிடிவி திடீரென ஆப்.! அரசியல் கட்சிகள் ஷாக்

By Ajmal KhanFirst Published Apr 29, 2024, 9:24 AM IST
Highlights

ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா அதிகாலையில் பழுது ஏற்பட்டது. இதனால் அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில்,  உடனடியாக கண்காணிக்கப்பட்டு சிசிடிவி கேமரா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

பலத்த பாதுகாப்பில் இவிஎம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 5 இடங்களுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் தமிழகத் முழுவதும் 39 இடங்களில் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. வாக்குபதிவு இயந்திரம் முழு நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மேலும் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்காணித்து வருகின்றனர். 

அப்போ ஊட்டி.. இப்போ ஈரோடு

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உதகை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிசிடிவி அனைத்தும் ஒரே நேரத்தில் ஆப் ஆனது. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் பழுது சரிசெய்யப்பட்டது. இந்தநிலையில் இதே போன்ற சம்பவம் ஈரோடு தொகுதியிலும் நடைபெற்றுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ,மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 4056, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள அரசு போக்குவரத்து பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சரி செய்யப்பட்ட கேமரா

ஜூன் மாதம் 4 ஆம் தேதி வாக்கு என்னப்படுகிறது அதுவரையிலும் 6 சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மேலும் 6 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா மட்டும் அதிகாலையில் பழுது ஏற்பட்டுள்ளது உடனடியாக தொழில்நுட்ப நபர்களைக் கொண்டு சிசிடிவி கேமரா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tamilisai : தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி குறைவாக கொடுத்தது ஏன்.? தமிழிசை அதிரடி விளக்கம்

click me!