TN 10th Exam 2024 Result : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

By Ramya s  |  First Published Apr 29, 2024, 9:50 AM IST

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. 
மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படது. மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது. 

இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. வரும் 6-ம் தேதி அரசு தேர்வுகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியிடப்பட உள்ளன. 
இதே போல் 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது.

Tap to resize

Latest Videos

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் 103 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று, அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன.

இதை தொடர்ந்து  மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விவரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண்களை இணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தகவலியல் மையங்கள், அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.

click me!