பர்கரில் கையுறை கிடந்த அதிர்ச்சி சம்பவம்.. KFC சிக்கன் 34 தரச் சோதனை..பரபரப்பு விளக்கம் அளித்த நிர்வாகம்

By Thanalakshmi VFirst Published Sep 17, 2022, 3:08 PM IST
Highlights

புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் உள்ள கே.எப்.சி ஓட்டலில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பர்கரில் கையுறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் நிரவாகம் தற்போது ஏசியாநெட் தமிழுக்கு விளக்கமளித்துள்ளது.
 

புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் உள்ள கே.எப்.சி ஓட்டலில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பர்கரில் கையுறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் நிரவாகம் தற்போது ஏசியாநெட் தமிழுக்கு விளக்கமளித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரியும் டேவிட் என்பவர், தனது நண்பருடன் கடந்த 5 ஆம் தேதி மாலை ஆரோவில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் கேஎஃப்சியில் பர்கர் வாங்கி உள்ளனர். 

மேலும் படிக்க:KFCயில் வாங்கிய பர்கரில் கிடந்த கையுறை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம் !

அதனை சாப்பிட்டு கொண்டிருக்கையில், பிளாஸ்டிக் பொருள் போன்ற ஒன்று தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது, அதில் நீல நிற கையுறை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட், இதுக்குறித்து உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். இதற்கு வருத்தம் தெரிவித்த நிர்வாகத்தினர், வேறு வேறு பர்கர் தருவதாக தெரிவித்துள்ளனர்.

அதனை மறுத்த டேவிட் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல உணவுக்கடையில் உணவில் கையுறை இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:சென்னை துறைமுகம் வந்த அமெரிக்க போர்கப்பல்.. வாயை பிளக்க வைக்கும் USCGC Midgett யின் அம்சங்கள்..

இதுக்குறித்து தற்போது KFC நிர்வாகம் நமது ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் உணவகங்கள் முழுவதும் சுகாதாரத்தில் உயர் தரம் கடைப்பிடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

 உணவகங்களில் சப்ளையர்களின் பண்ணையில் இருந்து வாடிக்கையாளர் வரை, KFC சிக்கன் 34 தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நுகர்வுக்கு பாதுகாப்பான உணவுகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட குழுவினர் இதுக்குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் அவசர கோரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

click me!