சென்னை துறைமுகம் வந்த அமெரிக்க போர்கப்பல்.. வாயை பிளக்க வைக்கும் USCGC Midgett யின் அம்சங்கள்..

By Thanalakshmi VFirst Published Sep 17, 2022, 2:28 PM IST
Highlights

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட்,  நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன‌ உபகரணங்களை கொண்டுள்ள மிட்ஜெட், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றன.
 

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட்,  நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன‌ உபகரணங்களை கொண்டுள்ள மிட்ஜெட், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றன.

சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க‌ இந்தோ பசிபிக் பகுதியை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் வருகை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலும் மிட்ஜெட்டின் பயணம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.. எவ்வாறு பதிவு செய்வது..? விவரம் இங்கே

இந்த கப்பலானது, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்திய‌ கடலோர காவல்படையினருடனான‌ சந்திப்புகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்து மாலத்தீவுக்கும் செல்லவுள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் புதிய ரக‌ கட்டர் வகை கப்பல்களில் மிட்ஜெட் மிகப்பெரியது. மேலும் இது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. அமெரிக்க கடலோரக் காவல்படையின் முக்கிய அங்கமாக திகழும் இக்கப்பல், மிகவும் சவாலான செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் கொண்டது.

இக்கப்பல் அதிக வேகம், அதிக திறனோடு விளங்குவதோடு மட்டுமில்லாமல், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான தளம் ஆகியவற்றை கொண்டது. மிகவும் கடினமான கடல் சூழல்களில் செயல்படும் திறனை கொண்டுள்ளது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன‌ உபகரணங்களை கொண்டுள்ள மிட்ஜெட், தேசிய பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுகின்றன.

மேலும் படிக்க:தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இந்தெந்த பகுதிகளில் இன்று மழை.. வானிலை அப்டேட்

418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்ட இந்த கப்பலுடன் 23 அதிகாரிகள், 120 மாலுமிகளும் வந்துள்ளனர். இந்த கப்பலை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் வரவேற்றார். இந்த கப்பல் 19-ந் தேதி வரை சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!