தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இந்தெந்த பகுதிகளில் இன்று மழை.. வானிலை அப்டேட்

Published : Sep 17, 2022, 01:39 PM IST
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இந்தெந்த பகுதிகளில் இன்று மழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல ஒழடுக்கு சுழற்கு காரணமாக,

17.09.2022 முதல்‌ 19.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

 20.09.2022 மற்றும்‌ 21.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:இனி சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது.. சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.09.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

20.09.2022 மற்றும்‌ 21.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர் வேகத்டுல்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.. எவ்வாறு பதிவு செய்வது..? விவரம் இங்கே

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!