இனி சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது.. சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Sep 17, 2022, 12:03 PM IST
Highlights

2022 - 23 கல்வியாண்டில் பொதுதேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த திருவள்ளூர் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களின் பட்டியலில் கொண்டு வருவதற்கும் 'சிகரம் தொடு 2022-23' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கோரிக்கைகள் பெறப்பட்டன.

 மேலும் படிக்க:துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. மாணவர் சேர்க்கை எப்போது ..? அமைச்சர் அறிவிப்பு

மேலும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் திருவள்ளூர் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, பொதுதேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பும், பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பும் தனிச்சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் சனிக்கிழமை வார விடுமுறை நாட்களில் சிறப்பு தனி வகுப்புகள் நடத்தப்படும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணிதம் உள்ளிட்ட கடினமான பாடங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த இந்த சிறப்பு வகுப்புகள் பயன்பெறும் என்று என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு இன்றுமுதல் விடுமுறை அறிவிப்பு..

click me!