கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு... பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் சார்பில் முறையீடு!!

By Narendran SFirst Published Sep 16, 2022, 7:40 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்துக்கள் விபச்சாரி வீட்டு பிள்ளைகளா..? கோயில் கோயிலாக போகும் துர்கா, சபரீசன் யார்..? செல்லூர் ராஜூ கேள்வி

அதில், ‘வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. மேலும் மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது விரிவான உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் சட்ட விதிகளை மீறிய செயலாகவே உள்ளது. உச்சநீதிமன்றம், கடந்த 2000ம் ஆண்டு மேலவளவு வழக்கில் இதேபோன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்ததாக மேற்கோள் காட்டியுள்ளது.

இதையும் படிங்க: சாக்கில் பண மூட்டையை வைத்து ஆள் பிடிக்கும் ஓபிஎஸ்..? உண்மை தொண்டனை விலைக்கு வாங்க முடியாது- ஆர்.பி உதயகுமார்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சடப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக, பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்ட நிலையில் வேறொரு நாளில் முறையிடுமாறு அவரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

click me!