திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழிற் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:குழந்தைகளை எளிதில் தாக்கும் கொரோனா..? பள்ளிகளில் முக கவசம் கட்டாயம்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
, கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயர்ந்தது. இதனை தொடர்ந்து நூல் விலையை குறைக்க வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள், நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் படிக்க:மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!
இதனையடுத்து கடந்த மாதம் விலையில் எந்த மாற்றமும் செய்யாத நிலையில், ஜூலை மாதத்தில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளதாக இன்று நூற்பாலை சங்கங்கள் அறிவித்துள்ளன. நூல்களின் விலை குறைந்துள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகளை ஆகவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க:நம்ம செஸ்...நம்ம பெருமை... ஒலிம்பியாட் போட்டி பேருந்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்