பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

By vinoth kumar  |  First Published Jul 1, 2022, 3:12 PM IST

கடந்த சில நாட்களாக இந்தப் பள்ளி ஆசிரியர்களில் சிலர், வகுப்பறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மண்ணச்சநல்லுார் அருகே அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் அருகே வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 14 ஆசிரியைகள், 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பள்ளி ஆசிரியர்களில் சிலர், வகுப்பறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!

இந்நிலையில், ஆசிரியை ஒருவர் ஆசிரியருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் நேற்று மீண்டும் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்ட மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுதொடர்பாக பெற்றோரிடம் மாணவர்கள் கூறினர். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;-  பட்டா மாறுதலுக்கு வந்த திருமணமான பெண்ணை மிரட்டி மகாபலிபுரத்தில் ரூம் போட்டு பலாத்காரம் செய்த விஏஓ..!

அந்த போட்டோக்களின் உண்மை தன்மையை விசாரிக்க கோரி ஆசிரியர்கள் தரப்பில் முசிறி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்து நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க;-   கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

click me!