ஏ டூ இசட் நான் தான்... பிரளயத்தை ஏற்படுத்துவேன்... இது நடிகர் மன்சூர் அலிகான் கேரண்டி

By SG Balan  |  First Published Mar 24, 2024, 11:20 PM IST

ஏ டூ இசட் நான் தான் மக்களிடம் சின்னத்தைக் கொண்டுசென்று பெரிய அளவில் பிரளயத்தை ஏற்படுத்துவேன். மலைகளைப் பசுமையாக்குவேன் என இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.


நான் B டீமோ A டீமோ இல்லை என்றும் மக்களுக்காக பணியாற்றவே தேர்தலில் நிற்கிறேன் எனவும் இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறார். வேலூரில் உள்ள மீன் மற்றும் கறி மார்கெட்டுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Latest Videos

undefined

மக்களுடன் உரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:

எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய அவசியம் இல்லை. நான்தான் இங்கு வெற்றி பெறப்போகிறேன். பல அமைப்புகள் மற்றும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கு போட்டியிடுகிறேன். திமுக, காங்கிரஸ், அதிமுக என மாறி மாறி நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டனர். ஆனால் மக்கள் பிச்சைகாரர்களாகவே இருக்கின்றனர்.

கொரோனா போல புதுசா படையெடுக்கும் பெருந்தொற்று... எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்கள்!

மோடி நடத்துவது நாடக தேர்தல். மோடி எல்லாத்தையும் முன் கூட்டியே செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார். ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன். ஆளுநரே தேவையில்லை. ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று.

மக்கள் முன் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். ஓட்டு மெஷினை எதிர்த்து யாரும் பேசவில்லை. நான் பாராளுமன்றம் சென்றால் வாக்கு சீட்டு மூலம் தேர்தலை நடத்தச் சொல்லுவேன். இது போலி ஜனநாயகம்; ஏமாற்று வேலை. பாஜக அதிமுகவுக்கு பி டீம் என இல்லை.

ஏ டூ இசட் நான் தான் மக்களிடம் சின்னத்தைக் கொண்டுசென்று பெரிய அளவில் பிரளயத்தை ஏற்படுத்துவேன். இன்றைக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன். திமுக அண்ணா சின்னத்தை வைத்து ஏமாற்றி, குடும்பத்தை வளர்க்கின்றனர். இப்படி இருக்கும்போது தனி ஒருவனாக போராடுகிறேன். ஏ டீமா பீ டீமா என்பது பின்னர் தெரியும். மலைகளைப் பசுமையாக்குவேன். இம்மாவட்டத்தில் அதிக ஏரிகளை அமைக்க வேண்டும்

இவ்வாறு இந்திய ஜனநாயக புலிகள் கழகத்தின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கங்கனா ரனாவத் உள்பட 111 வேட்பாளர்கள் அறிவிப்பு

click me!