மூன்று அணிகள் தேர்தல் களத்தில் இருக்கலாம்.. ஆனால் நேரடி போட்டி அ.தி.மு.க vs தி.மு.க தான் - EPS அதிரடி பேச்சு!

By Ansgar R  |  First Published Mar 24, 2024, 10:25 PM IST

Edappadi K. Palaniswami : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இன்று திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அவர் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களாக பிரதமரை பற்றி பேசுகிறார். அது பற்றி எனக்கு கவலை இல்லை, இரண்டாவதாக என்னை பற்றி பேசுகிறார், நாம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்.

எங்களின் தலைவர் எம்.ஜி.ஆர் தான் தி.மு.க வின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றினார். நாங்களா தமிழகத்தை கெடுத்தோம்.. ஸ்டாலின் மகன் உதயநிதி கடந்த 3 ஆண்டுகளாக ஒரே செங்கலை காட்டுகிறார். நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே. நீட் யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? நேருக்கு நேர் விவாதிக்க தி.மு.க. தயாரா?

Tap to resize

Latest Videos

undefined

பச்சை துண்டு போட்டு பச்சை பொய் பேசுவதாக என்னைப் பற்றி ஸ்டாலின் சொல்கிறார். மக்களுக்கு எதுவுமே செய்யாமல், அதை செய்தேன் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுபவர் ஸ்டாலின். ஒரே மேடையில் இது குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா? தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

1 லட்சத்து 70 ஆயிரம் கோடி 2 G ஊழல் வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. திகார் ஜெயிலுக்கு போக இருக்கிறார்கள். இப்போதுள்ள மந்திரிகள் பலரும் ஜெயிலுக்கு போக இருக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு. மேலும் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என்று 3 கட்சிகள் நின்றாலும், நேரடி போட்டி திமுக மற்றும் அதிமுக இடையே தான் என்று கூறியுள்ளார். 

click me!