Actor Soori : மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரபல நடிகர் சூரி அவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்திய அளவில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தோழமைக் கட்சிகளோடு இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல "இந்தியா கூட்டணி" கட்சிகளை ஆதரித்து ஐந்து நாள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நேற்று துவங்கி எதிர்வரும் புதன் கிழமை வரை அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மேகதாது அணை கட்ட ரஜினி, கமல் ரெண்டு பேரும் இதைச் செய்யணும்: வாட்டாள் நாகராஜ் பேட்டி
இந்நிலையில் இன்று மதுரையில் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் வருகின்றார். குறிப்பாக சு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து தனது பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சூரி அவர்கள்.
இதனால் நடிகர் சூரி அவர்களும் உதயநிதிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூரி, நான் தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன் என்பது அவருக்கு தெரியும். "ஆகையால் என்னை அவர் அழைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
அப்பொழுது உதயநிதி அழைத்தால் பிரச்சாரத்திற்கு சூரி செல்வாரா என்பது குறித்த கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. நடிகர் சூரி, உதயநிதியுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு.. தொடர்ந்து கள்ளமௌனம் காக்கும் திமுக - விளாசும் பாஜக தலைவர் அண்ணாமலை!