
பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை
சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46வயது பெண் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே காரில் சென்ற அகில பாரத இந்து அமைப்பின் மாநில துணை தலைவர் சுந்தரம் என்கிற மாயாஜி(47) பெண் வழக்கறிஞர் அருகே காரை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து தகாத வார்த்தைகளால் பேசிய அவர், ஈசிஆர் போகிறேன் வரியா.? என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வழக்கறிஞர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண் சப்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் மாயாஜி, இதனையடுத்து பெண் வழக்கறிஞர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஷாக்கிங் நியூஸ்! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!
அதிரடியாக கைது செய்த போலீஸ்
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேரமா மற்றும் கார் எண் மூலம் சம்பந்தபட்ட நபரை போலீசார் தேடியுள்ளனர். இதில் அகில பாரத இந்து அமைப்பின் மாநில துணை தலைவர் சுந்தரம் என்கிற மாயாஜி என தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த அவரை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து மாயாஜி மீது பெண் களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், BNS- 75(2) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இவர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாணி கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் கோயில் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அலறிய பக்தர்கள்!