சாட்டையை சுழற்றும் எடப்பாடி.! நிர்வாகிகளுக்கு செக் வைக்க தேதி குறித்த அதிமுக

Published : Jan 28, 2025, 11:43 AM IST
சாட்டையை சுழற்றும் எடப்பாடி.!  நிர்வாகிகளுக்கு செக் வைக்க  தேதி குறித்த அதிமுக

சுருக்கம்

2026 சட்டமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள ஆய்வை தொடங்குகிறார். இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதிமுகவும் உட்கட்சி மோதலும்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றி கிட்டாமல் உள்ளது. இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அதிமுகவின் வாழ்வா.? சாவா தேர்தலாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தற்போதே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கியுள்ளார்.

இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். இதற்கு முன்னதாக தொகுதி நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசடை நடத்தப்பட்டது. அந்ந வகையில் சென்னை மாவட்ட கள ஆய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. 

கள ஆய்வில் எடப்பாடி

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும்; புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்துவிட்டதா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கள ஆய்வுக் குழுவினர், சென்னை மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் ஆய்வு செய்து அதன் விபரங்களை தலைமைக்கு சமர்ப்பித்தனர்.

சென்னை மாவட்டத்தில் கள ஆய்வு

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், வருகின்ற 4.2.2025 அன்று, கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் படி, வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென் சென்னை தெற்கு பகுதி கள ஆய்வை முன்னாள் அமைச்சர் செம்மலை நடத்த உள்ளதாகவும், இதே போல தென் சென்னை வடக்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை தெற்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வடசென்னை தெற்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் மோகன் களாய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபோல சென்னை புறநகர் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் கள ஆய்வை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கள ஆய்வுக் குழுவினர் தங்கள் மாவட்டங்களுக்கு வந்து கள ஆய்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற,

முழு கவனத்தோடு செயல்படுங்கள்

சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், முன்னாள் மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து உரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்