இஸ்ரோவின் 100வது ராக்கெட்! வரலாறு படைக்க தயாராகிறது இந்தியா! கவுண்டவுன் தொடங்கியது!

Published : Jan 28, 2025, 10:35 AM ISTUpdated : Jan 28, 2025, 10:39 AM IST
 இஸ்ரோவின் 100வது ராக்கெட்! வரலாறு படைக்க தயாராகிறது இந்தியா! கவுண்டவுன் தொடங்கியது!

சுருக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி.எப்15 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்துகிறது. 

விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அதன்படி சந்திரியான், மங்கள்யான் என பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்விஎஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி.எப்15 ராக்கெட் நாளை காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த என்விஎஸ் – 02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இஸ்ரோவிற்குள் உள்ள பிற செயற்கைக்கோள் பணி மையங்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தை தயாரித்து பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் திறனையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: முருகன் பக்தர்களுக்கு அடுத்தடுத்து சூப்பர் நியூஸ்! ஆசியாவிலேயே பெரிய 160 அடி சிலை! பழனியில் இந்த கட்டணம் ரத்து

குறிப்பாக இந்த செயற்கைகோள் 2,250 கிலோ எடையும், 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும், பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு! கல்வித்துறையில் பறந்த முக்கிய உத்தரவு என்ன தெரியுமா?

இந்நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் பெரிய ராக்கெட் SLV-ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்