பாஜகவுடன் கூட்டணி உடன்பாடா.?அண்ணாமலையோடு பேசியது என்ன.? ஜெயக்குமார் அதிரடி பதில்

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அண்ணாமலையுடன் ஜெயக்குமார் சந்தித்துப் பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது. 


அதிமுக - பாஜக கூட்டணி

தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்து கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டார்.

Latest Videos

இதன் காரணமாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனி தனி அணியாக தேர்தலை எதிர்கொண்டது. இதனால் டெபாசிட்டை அதிமுக பாஜக இழந்தது. இதனையடுத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகமாக வசூலித்த மின் கட்டணத்தை திருப்பி கொடுக்கனும்.! திமுக அரசுக்கு செக் வைத்த அண்ணாமலை

ஜெயக்குமாருடன் அண்ணாமலை சந்திப்பு

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோடு - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார். இதனால் மீண்டும் கூட்டணி அமையுமா என்ற யூகங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், அப்போது பேசிய அவர், சுவிட்சர்லாந்து நாட்டு டாவோஸ் நகரில் நடைப்பெற்ற பொருளாதார மாநாட்டின் மூலம் இந்தியா 20 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இதில் மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் 15 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் வரிப்பணத்தில் சுவிட்சர்லாந்து சென்ற அமைச்சர் டி ஆர் பி ராஜா, முதலீடுகள் ஈர்க்காமல் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.

கூட்டணி எப்பவும் இல்லை

அதிமுக என்றும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என தெரிவித்தவர், திமுக தான் பதவிக்காக, குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் உரிமைகளை வீட்டுக் கொடுத்ததாக விமர்சித்தார்.   பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் திமுக பாஜக இடையே எழுதப்படாத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் போது எந்த ஒப்பந்தம் குறித்து தெரியவரும் எனவும் கூறினார்.  ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர்களுடன் சிரித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அரசியல் நாகரீகம் மற்றும் பண்பாடு கருதி தான் அண்ணாமலை உடன் பேசியதாகவும், பாஜக உடன் இன்றும் என்றும் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். 

அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள்

பெரியார் குறித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்து குறித்த கேள்விக்கு,  தமிழ்நாடு பெரியார்  மண், திராவிட மண், பட்டியலினத்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமை குரலாக ஒலித்தவர் பெரியார். பெரியாரை  சிறுமைப்படுத்துபவர் சீமானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பதிலளித்தார். 

எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும், எடப்பாடியும் மென்று கொண்டிருக்கிறார்கள்- விளாசும் டிஆர்பி ராஜா

click me!