வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published : Oct 07, 2023, 11:24 AM ISTUpdated : Oct 07, 2023, 11:43 AM IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சுருக்கம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செ்ன்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஒருவார காலமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!