ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான தீபிகா (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (50). இவருடைய மனைவி கீதா (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27). துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான தீபிகா (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சித்குமார் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையும் படிங்க;- விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை! சிக்கிய கடிதம்! அவங்க 3 பேரும் தான்! அவரு பாலியல் ரீதியாக இப்படி செய்தாரு.!
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டை வீட்டு வெளியேறி இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க;- சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இந்த 5 நாட்களுக்கு போக்குவரத்து அதிரடி மாற்றம்..!
இதனையறிந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகனிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகன் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையில் பெற்றோர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் சரவணன், கீதா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். எதிர்ப்பையும் மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.