ஒரே நிமிடத்தில் தரைமட்டமான மாற்றுத் திறனாளியின் பஞ்சர் கடை; கம்பிரசர் வெடித்து 4 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 5:25 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாற்றுத்திறனாளி நடத்தி வந்த பஞ்சர் கடையில் கம்பிரசர் இயந்திரம் வெடித்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 4 பேர் படுகாயம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் லதிப்(வயது 38) என்னும் மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். அங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையலி், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த லாரியினை ஓட்டுநர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய இருவர் ஓட்டி வந்து லதிப் கடையில் லாரிக்கு காற்று அடைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது.

Tap to resize

Latest Videos

undefined

பணம், பதவி மட்டும் தான் தற்போதைய அதிமுகவின் நிலைப்பாடு; டிடிவி தினகரன் விமர்சனம்

இதில் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து இரத்த வெள்ளத்துடன் கிடந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வேலை செய்து வந்த முருகன், லாரி ஓட்டுநர்கள் இருவர் என 4 பேர் கை, கால்கள் முறிந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை பெற்று ஓட்டுநர்கள் இருவரும் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விலை உயர்ந்தாலும் தனியாரை விட கம்மி தான்; ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

லதிப், முருகன் ஆகிய இருவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாகலூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

click me!