கெலவரப்பள்ளி அணையில் மீன் பிடிக்கச்சென்ற இலங்கை அகதி பிணமாக மீட்பு

By Velmurugan sFirst Published Aug 26, 2023, 5:38 PM IST
Highlights

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் மீன்பிடிக்க சென்ற இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் 2 தினங்களுக்கு முன் மாயமான நிலையில் சடலமாக மீட்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு அருகே இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வரும்நிலையில் அவ்வபோது முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அணை பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் முகாமைச் சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் சீபாகரன்(வயது 32). பெயிண்டராக வேலைசெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சீபாகரன் அணையில் மீன்பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடிக்கச் சென்ற நபர் நீண்டநேரமாக வராததால் ஆற்றில் மாயமானதாகக் கூறி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 2 கோடி பேருக்கு சர்க்கரை நோய்; உடற்பயிற்சி ஒன்றே தீர்வு - ராதாகிருஷ்ணன் தகவல்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படை வீரர்கள் இரவு வரை தேடிய வீரர்கள் இன்று 2வது நாளிலும் சீபாகரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சீபாகரன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அட்கோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!