கொட்டித் தீர்க்கும் கனமழை… நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !!

By Selvanayagam PFirst Published Oct 5, 2018, 8:41 PM IST
Highlights

நீலகிரி  மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மிக கனமழை கொட்டி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் நாளையும்,  நாளை மறுநாளும்  மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முனதினம் முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அந்த மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவ்ட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.

click me!