தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று 3 வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தஞ்சாவூர், நாகை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க:நாளை எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை.. 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. வெதர் அப்டேட்
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, தென்காசி,தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!