வடகிழக்கு பருவமழையால் பதிவான உயிரிழப்புகள் எத்தனை? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!!

By Narendran SFirst Published Nov 4, 2022, 5:16 PM IST
Highlights

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபப்ட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா..? வானிலை மையம் அறிக்கை

சில பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 30 நிமிடங்களில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது அதிக அளவிலான மழை என்று கூறப்படுகிறது. இவ்வாறு பெய்து வரும் மழை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு காரணங்களால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். வீடுகள் சேதமடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி கால்நடைகளும் இறந்துள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!

இந்த நிலையில் இதுக்குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (55.96 மி.மீ.) பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 18 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 101 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!