தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை.. 19 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

By Thanalakshmi V  |  First Published Jul 21, 2022, 1:54 PM IST

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளாதாகவும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி
மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:ஸ்ரீமதிக்கு அதே பள்ளியில் படிக்கும் மாணவனுடன் காதல்...??? டிரைவரிடம் சிக்கிய ஆதாரம்... சவுக்கு சங்கர் பகீர்.

22.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌,
கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

23.07.2022 முதல்‌ 25.07.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:மாணவி மரண வழக்கு.. தந்தையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்டு உத்தரவு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு:

21.07.2022. 22.07.2022: குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப் பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மடியில் இருந்து கீழே விழுந்தாரா?புதிய வீடியோவால் பரபரப்பு

click me!