Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

By vinoth kumarFirst Published Oct 21, 2022, 7:09 AM IST
Highlights

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வங்கக் கடல் பகுதியில் காற்றழுத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- Diwali : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா உங்க ஊருக்கு போகும் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியிருந்தது. 

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்  லலிதா அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. குடித்துவிட்டு ஓட்டினாலும் ஆப்பு தான்..!

click me!