வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தா பெரியதம்பி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்
தனித்துவமான சமையல் வீடியோக்கள், கிராமத்து வார்த்தைகளுடன் எழில் கொஞ்சும் இயற்கை வெளியில் இயற்கையான சமையல், எதை செய்தாலும் பிரமாண்டமாக சமைக்கும் உத்தி என மிரள வைப்பவர்கள் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவினர். சுமார் 2.5 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்கள் கொண்டிருக்கும் இந்த சேனலை, சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகிய சகோதரர்களுடன் தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்களின் சமையல் படுபிரபலம். இதில் பெரிய தம்பி தாத்தாவின் வசன உச்சரிப்புக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இன்னைக்கு ஒரு புடி என்ற அவரது வசனம் மிக பிரபலமானது.
கடந்த 2019 தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதன்பிறகு, இவர்களது யூடியூப் சேனல் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் இக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support! pic.twitter.com/zCotVgS5w8
— Subramanian Velusamy (@vstamilan)
இந்த நிலையில், வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலின் பெரியதம்பி தாத்தா இதய நோய்ப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாத்தா நல்ல நிலையில் இருப்பதாகவும், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று அந்த குழுவைச் சேர்ந்த சுப்பிரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது உடல்நலம் தேறி தாத்தா பெரியதம்பி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அயோத்தி இக்பால் அன்சாரி விருப்பம்!
இந்த நிலையில், வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தா பெரியதம்பி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது உடல்நிலை குறித்து விசாரித்து ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி. ராகுல் காந்தி போன் செய்து உங்களுக்கு ஒன்னும் ஆகாது தாத்தா விரைவில் நலம் பெற்று திரும்புவீர்கள் என கூறினார். அவருக்கும் என் நன்றி.” என தெரிவித்துள்ளார்.