தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது.
கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது.
இதையும் படிங்க;- கனமழை எதிரொலி... சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!! காவல் துறை அறிவிப்பு!
இதனால், டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!