சென்னை புழலில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புழலில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புழலில் தனியாருக்கு சொந்தமான பொம்மை சேமிப்பு மற்றும் பலூன் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் கரும்புகை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குடோன் காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி... சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!! காவல் துறை அறிவிப்பு!
அதன்பேரில் மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே இந்த தீவிபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
இதையும் படிங்க: சென்னையில் அனுமதியின்றி போராட்டம்.. பாஜக தலைவர் அண்ணாமலை கைது - பரபரப்பு !
இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.