நீதிமன்ற உத்தரவிபடி தேவர் தங்க கவசத்தை கையெழுத்திட்டு பெற்ற மதுரை டி.ஆர்.ஓ அதனை மீண்டும் மதுரை தனியார் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
நீதிமன்ற உத்தரவிபடி தேவர் தங்க கவசத்தை கையெழுத்திட்டு பெற்ற மதுரை டி.ஆர்.ஓ அதனை மீண்டும் மதுரை தனியார் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது கட்சியின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் சென்று கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !
அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதை அடுத்து இந்த ஆண்டு தேவர் பூஜைக்கு தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற கடந்த செப்.30 அன்று வங்கிக்கு நேரில் சென்ற திண்டுக்கல் சீனிவாசன், கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அக்.3 ஆம் தேதி அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மர் ஆகியோரும் தங்க கவசத்திற்கு உரிமை கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் கவசத்தை தர வங்கி நிர்வாகம் மறுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்.18 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதே வழக்கில் இடையீட்டு மனுவாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இரு தரப்பினர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவருக்கும் கவசத்தை தர உத்தரவிட மறுப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்பில், கவசம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவர் சிலைக்கு கவசம் சார்த்தப்பட்டு அக்.28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் குருபூஜை விழா முடிந்து நவம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் தங்க கவசம் இதே நடைமுறையின் படி வங்கி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டது.