சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!

Published : Oct 29, 2022, 10:30 AM ISTUpdated : Oct 29, 2022, 10:33 AM IST
சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இன்ஜினியர் திருமணத்தை திருமண மண்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நாகப்பிரியாவின் உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினியர் சின்னசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க;- திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனை… ஆத்திரத்தில் எடுத்த முடிவால் சோகம்!!

இந்நிலையில், திருமண ஆசைக்காட்டி நாகபிரியாவிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், நாகபிரியா கர்ப்பம் அடைந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இரு வீட்டார் குடும்பத்துக்கு தெரியாமல் வாடகை வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சின்னசாமிக்கும், விருதுநகரைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த, நாகபிரியா தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இதுதொடர்பாக தகவலறிந்த திருமங்கலம் போலீசார் நாகபிரியா, சின்னசாமி, அவரது பெற்றோரை திருமங்கலம் மகளிர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;-  ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!