மீன் பிடிப்பதில் தகராறு; தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி வெட்டிக் கொலை!!

By Dhanalakshmi G  |  First Published Oct 28, 2022, 11:47 AM IST

மேலூர் அருகே கூலி தொழிலாளிகளான கணவன், மனைவி இரவில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே ஆண்டிகோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (40). கால்நடை மேய்த்து வரும் இவர் கூலி தொழிலாளியாகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இங்குள்ள இளமுனி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மறுகால் தண்ணீரில் பானைகளை வைத்து கெண்டை மீன்களை பிடித்து உண்பது வழக்கம். இதனை "பானைபரி" என்று அழைப்பதுண்டு. 

Tap to resize

Latest Videos

undefined

பானைபரி மூலம் மீன்பிடித்த கருப்பசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனையில் முடிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி இருவரையும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு மழுவேந்தி மற்றும் ராஜதுரை இருவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.  

நீ பூணூல் மட்டும் தான் அறுப்ப! நான் இரண்டையும் சேர்த்து அறுத்துவிடுவேன்! சுப. வீக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை

கொலை செய்தது மழுவேந்தி மற்றும் ராஜதுரைதான் என்று உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த கீழவளவு போலீசார் இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணையை துவக்கினர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ராஜதுரை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai: சென்னையில் வினோதம்! புதிய வீட்டுக்கு சேவல் பலி கொடுக்கும் முயற்சியில் தானே பலியான கொத்தனார்

click me!