ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா மக்களே உங்களோடு நான் துணை நிற்பேன்!! ஹர்பஜன் சிங் உருக்கம்...

Published : Nov 19, 2018, 01:37 PM IST
ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா மக்களே  உங்களோடு நான் துணை நிற்பேன்!!  ஹர்பஜன் சிங் உருக்கம்...

சுருக்கம்

கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்  ட்விட்டரில் ஆதரவு குரல் கிளப்பியிருக்கிறார்.

கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மக்கள் அங்கு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ''ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே'' என்று உருக்கமாக எழுதியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டில் உதவி எண்களையும் பகிர்ந்துள்ளார். மீட்பு பணிக்காக அரசு அளித்து இருக்கும் அவசர உதவி எண்களை அளித்து இருக்கிறார்.  

PREV
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு