அரை நிர்வாணமாக பெண் மறியல்… காரணம் என்ன? மெரினா பீச்சில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Nov 6, 2021, 10:25 AM IST
Highlights

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அரை நிர்வாணமாக மறியல் செய்த பெண், கேட்க வந்த காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அரை நிர்வாணமாக மறியல் செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை. சென்னை வருகை தரும் சுற்றுலா பயணிகள், மெரினா கடற்கரைக்கு தவறாமல் வருகை தந்து கடலில் அழகை கண்டு ரசிபர். மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் அணுகக்கூடிய வகையில் இருக்கும். மெரினா கடற்கரை சாலை, அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் மிகவும் பரபரப்பாக காணப்படும். காலை சூரிய உதயமும் மாலையில் சூரியன் மறையும் போதும் கடற்கரையில் நடைபயிற்சி செய்வோர், காண வரும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் ரசிக்கும் வகையில் காட்சி அளிக்கும். மேலும் இந்த கடற்கரை சாலைகளில் அரசின் சில முக்கிய கட்டிடங்களும் ஐஸ் ஹவுஸ், சேப்பாக் அரண்மனை, செனட் ஹவுஸ், பி.டபிள்யூ.டி அலுவலகம், பிரசிடென்சி கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்களாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல பெரிய தலைவர்களின் நினைவிடங்களும் அங்கு அமைந்துள்ளது. இத்தகைய பரபரப்பான சாலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் எப்போதும் இருப்பர். அதேபொல் மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் மகாத்மா காந்தி, கண்ணகி போன்றவர்களின் சிலைகள் உள்ளன. இதுமட்டுமின்றி சுவாமி சிவானந்தா, ஔவையார், தந்தை பெரியார், திருவள்ளுவர், டாக்டர் அன்னி பெசன்ட், ஜி.யு. போப், சர் தாமஸ் மன்ரோ, சுப்பிரமணிய பாரதியார், காமராஜர், ராபர்ட் கால்ட்வெல், காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரின் சிலைகளும் அங்கு அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கடற்கரைசாலையில் பெண் ஒருவர் அரைநிர்வாணமாக மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 10.30 மணி அளவில் கண்ணகி சிலை அருகே குடிபோதையில் தனது கணவருடன் சேர்ந்து அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி அந்தபெண் சாலை முழுவதும் அங்குமிங்குமாக திரிந்துக் கொண்டிருந்தார். அவரை வாகனங்களில் செல்வோர் பார்த்துகொண்டே சென்றனர். பின்னர் தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள முயற்சித்தனர். அப்போது காவல் துறையிடமும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த பெண் மெரினா சாலையோர பகுதிகளில் தனது கணவருடன் தங்கி வருவதாகவும், தனது கணவரை யாரோ ஒருவர் தாக்கி விட்டதாகவும் கூறிய அந்த பெண், தனது கணவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனிடையே அந்த பெண் குடிபோதையில் மறியல் செய்ததும் தெரியவந்தது. இப்படி போதையில் பரபரப்பான கடற்கரை சாலையில் அரைநிர்வாணத்துடன் நின்று மறியல் செய்ததும் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!